ரோட்டரி சார்பில் கிரிக்கெட் போட்டி
By தஞ்சாவூர், | Published on : 13th April 2013 05:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தஞ்சாவூர் டெல்டா ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரோட்டரி சங்கங்களுக்கு இடையேயான டெல்டா கப் என்கிற கிரிக்கெட் போட்டி அண்மையில் நடைபெற்றது.
தஞ்சாவூர் கமலா சுப்பிரமணியம் பள்ளியில் நடைபெற்ற போட்டிக்குச் சங்கத் தலைவர் எம். கலைச்செல்வன் தலைமை வகித்தார். ஆளுநர் தேர்வு சி. குணசேகரன் போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.
இதில், முதல் பரிசை பிக் டெம்பிள் அணியும், இரண்டாம் பரிசை கிரானரி அணியும் பெற்றன.
வெற்றி பெற்றவர்களுக்குத் துணை ஆளுநர்கள் சா. லெனின், ஆ. ஆரோக்கியசாமி, துணை ஆளுநர் தேர்வு என்.டி. பாலசுந்தரம், முன்னாள் துணை ஆளுநர்கள் கோ. அன்பரசன், எம்.எஸ். ஆசிப் அலி, கமலா சுப்பிரமணியம் பள்ளித் தலைவர் பி. வள்ளியப்பன் ஆகியோர் பரிசு வழங்கினர். போட்டித் தலைவர் எஸ்.ஆர். கலைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.