Enable Javscript for better performance
சாந்தன், முருகன், பேரறிவாளனின் உயிரைக் காக்கக் கோரி முதல்வருக்கு தந்தி- Dinamani

சுடச்சுட

    

    சாந்தன், முருகன், பேரறிவாளனின் உயிரைக் காக்கக் கோரி முதல்வருக்கு தந்தி

    By தஞ்சாவூர்  |   Published on : 14th April 2013 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்களான சாந்தன், முருகன், பேரறிவாளனின் உயிரைக் காக்க வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு தஞ்சாவூரிலிருந்து தமிழர் உரிமை கூட்டமைப்பினர் சனிக்கிழமை தந்தி அனுப்பினர்.

    இந்த தந்தியில், உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட புல்லர் வழக்கின் தீர்ப்பு காரணமாக சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கும் தண்டனைக்கு வழிவகுக்கும் அச்சம் உள்ளது. எனவே, மூன்று பேரின் மரண தண்டனையை ரத்து செய்ய தமிழக முதல்வர் 161-வது விதியின் கீழ் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் இயற்ற வேண்டும். மேலும், தமிழக ஆளுநர் மூலம் ரத்து செய்யும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மூவரின் உயிரைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது.

    தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொருளாளர் என். பாலசுப்பிரமணியன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலர் குழ. பால்ராசு, தமிழர் வாழ்வுரிமை இயக்க மாநிலத் துணைத் தலைவர் ம. ரவிச்சந்திரன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்டத் துணைத் தலைவர் கி. சண்முகராஜ், தமிழ் மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன், உலகத் தமிழர் பேரமைப்பு மாவட்டச் செயலர் பொன். வைத்தியநாதன், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலர் துரை. மதிவாணன் உள்பட ஏறத்தாழ 50 பேர் தந்தி அனுப்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai