Enable Javscript for better performance
சாஸ்த்ரா பல்கலை.யில்விளையாட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் 12-வது விளையாட்டு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    விழாவில் பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு, குடந்தை வட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி பரிசுகள் வழங்கினார். விளையாட்டு போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மஞ்சள் அணியும், 2-ம் இடத்தை பச்சை அணியும் பெற்றன.

    தடகளத்தில் வெற்றி பெற்ற பிரவீண்குமார், அட்சயா, காவேரி ஆகியோர் தனி நபர் பரிசுகளை பெற்றனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 364 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மைய புல தலைவர் ரகுநாதன் வரவேற்றார். மாணவர் அந்தோனிதீபக் நன்றி கூறினார். தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவர்களின் சேவையை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இதையடுத்து, மாலையில் நடைபெற்ற விழாவில் சென்னை ஐநாட்டிக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவன இணை இயக்குனர் மோகன் வைத்தீஸ்வரன் பரிசுகள் வழங்கி பேசும்போது, வேலைவாய்ப்புகளை எளிதில் பெற மாணவர்கள் மென்திறன்களை வளர்த்து கொள்ள வேண்டியது அவசியம். அடுத்த 10 ஆண்டுகளில் அறிவை அடிப்படையாக கொண்ட அறிவுசார் செயல்திறன் என்பது முக்கிய இடத்தை பெறும். அத்தகைய சூழலில் மாணவர்களுக்கு வாய்ப்புகள் பெருமளவில் இருக்கும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai