Enable Javscript for better performance
சுமை வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் அருகே சுமை வேன் கவிழ்ந்த விபத்தில் பலத்தக் காயமடைந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தார்.

    தஞ்சாவூர் அருகேயுள்ள வெட்டிக்காடு மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சார்ந்த கிராம மக்கள் வெள்ளிக்கிழமை நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்துக்கு வந்தனர்.

    பின்னர், அவர்களில் 15 பேர் சுமை வேன் மூலம் வெட்டிக்காடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் சென்றபோது டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில், பயணம் செய்த வெட்டிகாடைச் சேர்ந்த பார்வதி (50) உள்பட 15 பேர் காயமடைந்தனர்.

    இவர்களில் பலத்தக் காயமடைந்த 11 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு பார்வதி சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai