Enable Javscript for better performance
தஞ்சையில் யுகாதி பெருவிழா- Dinamani

சுடச்சுட

    

    தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி, தஞ்சாவூரில் மாவட்ட நாயுடு பெருமக்கள் நலச் சங்கம் சார்பில் யுகாதி பெருவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவில் பெண்களுக்கான ரங்கோலி கோலப் போட்டி, சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், வீணை இசை நிகழ்ச்சி, மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சி, மாறுவேடம், நடனப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குச் சங்கத் தலைவர் டி.ஜி. பக்தவத்சலம் தலைமை வகித்தார்.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 80 வயது நிறைவடைந்த தம்பதிகள் கெüரவப்படுத்தப்பட்டனர்.

    மேலவெளி ஊராட்சித் தலைவர் ஆர். முரளிதரன், என்.எஸ். இளங்கோ, ஆ. ஆராவமுதன், சங்கப் பொதுச் செயலர் ஆர்.எஸ். சீத்தாராமன், பொருளாளர் ஆர்.கே. பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai