Enable Javscript for better performance
தஞ்சையில் ரூ. 1.50 கோடியில் பல்நோக்கு உள் விளையாட்டரங்கம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சையில் ரூ. 1.50 கோடியில் பல்நோக்கு உள் விளையாட்டரங்கம்'

    By தஞ்சாவூர்  |   Published on : 14th April 2013 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் ரூ. 1.50 கோடியில் பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன்.

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

    தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதற்கேற்ப விளையாட்டு அரங்கத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ. 1.50 கோடி மதிப்பில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம், ரூ. 50 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி கட்டடம், ரூ. 30 லட்சம் மதிப்பில் டென்னிஸ் ஆடுகளம் ஆகியவை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மாவட்ட விளையாட்டுப் பிரிவு மூலம் நடத்தப்படும் அனைத்து விளையாட்டுப் போட்டிகள், பயிற்சி முகாம்களில் திறமை வாய்ந்த இளம் வீரர்கள், வீராங்கனைகளை பங்கேற்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிராம மக்களிடையே விளையாட்டு, உடல் பயிற்சி கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என்றார் பாஸ்கரன்.

    மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தா.ச. அன்பு, மாவட்ட வன அலுவலர் செல்வராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai