Enable Javscript for better performance
திருவையாறு இசைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவையாறு இசைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

    By தஞ்சாவூர்,  |   Published on : 14th April 2013 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அரசு இசைக் கல்லூரி மாணவர்கள் சனிக்கிழமை வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் மேற்கொண்டனர். இந்தக் கல்லூரியில் உமா மகேஸ்வரி முதல்வராகப் பணியாற்றி வந்தார். இவரை தமிழக அரசு திடீரென பணி இறக்கம் செய்து அதே கல்லூரியில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வருபவரை முதல்வராக நியமித்து ஆணையிட்டுள்ளதாம். இதைக் கண்டித்து கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் கணேஷ், செயலர் சுகந்தி தலைமையில் மாணவ, மாணவிகள் வகுப்பைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மாணவர்கள் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai