Enable Javscript for better performance
வாகனம் மோதி இளைஞர் சாவு:தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைதுவாகனம் மோதி இளைஞர் சாவு:- Dinamani

சுடச்சுட

    

    வாகனம் மோதி இளைஞர் சாவு:தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைதுவாகனம் மோதி இளைஞர் சாவு:

    By பாபநாசம்,  |   Published on : 14th April 2013 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாபநாசம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார். இருவர் பலத்த காயமடைந்தனர்.

    மெலட்டூர் காவல் சரகம், தட்டாரத் தெருவைச் சேர்ந்த பாண்டியன் மகன் சிவப்பிரகாசம் (24). அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணன் (26), வெங்கடேசன் (26).

    இவர்கள் மூவரும் பாபநாசம் சென்றுவிட்டு, ஒரு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். மெலட்டூர் வெட்டாற்றாங்கரையில் வந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மூவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே சிவப்பிரகாசம் உயிரிழந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மெலட்டூர் போலீஸார் வழக்குப் பதிந்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

    உறவினர்களிடம் சடலம் ஒப்படைப்பு: பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிவப்பிரகாசத்தின் உடலை அவரது பெற்றோரிடம் போலீஸார் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர்.

    தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது: அப்போது, மெலட்டூர் கடைவீதியிலுள்ள கடைகளை அடைக்க சொல்லி, தகராறில் ஈடுபட்ட சிலர்  மெலட்டூர் கடைவீதியில் தையல் கடை நடத்தி வந்த  ஒத்தைத் தெருவைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் சிவசங்கர் என்பவரை தாக்கினர். காயமடைந்த அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில், கடைகளை அடைக்க சொல்லி தகராறு செய்து,  சிவசங்கரை தாக்கியதாக மெலட்டூர் நடுத்தெரு கோவிந்தராஜ் மகன் சுகுமாரன் (39), மெலட்டூர் குளத்தங்கரைத் தெருவைச் சேர்ந்த குமார் மகன் ரமேஷ் (23), இருவரையும் மெலட்டூர் போலீஸார் கைது செய்தனர். தப்பியோடிய சுதாகர், சின்னமணி, கண்ணன், ஹைதர்அலி உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai