Enable Javscript for better performance
\\\"விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதோடு, விளையாட்டிலும் கவனம் செலுத்தினால் வாழ்வில் முன்னேறலாம் என சர்வதேச தடகள விளையாட்டு வீரரும், தேசிய உயரம் தாண்டுதல் பயிற்சியாளருமான திருச்சி அண்ணாவி கூறினார்.

    கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் கல்லூரி விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு துணை முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். விழாவில் கல்லூரி சார்பில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி அண்ணாவி மேலும் பேசியது: விளையாட்டில் மாணவர்கள் சிறந்து விளங்கினால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதேநேரத்தில், உடல் ஆரோக்கியமும் பெறும்.

    விளையாட வாய்ப்பில்லாதபோது வீட்டில் தரையில் உட்கார்ந்து சாப்பிட வேண்டும். யோகா கற்று கொள்ள வேண்டும். அப்போதுதான் உடல் நோய் நொடியின்றி வாழலாம். இன்றைய மாணவர்கள் கிரிக்கெட்டில் காட்டும் ஆர்வத்தை தடகளத்திலும், குழு போட்டிகளிலும் காட்ட வேண்டும். தடகள போட்டியில் மட்டும் தான் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல முடியும். தடகள போட்டியினை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பாக விளையாடினால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.  விளையாட்டுத் துறையில் சாதிக்க பெற்றோர் ஊக்கமளிக்க வேண்டும். வீட்டுக்கொரு விளையாட்டு வீரர்கள் இத்துறையில் வந்தால் நாம் எளிதில் ஒலிம்பிக் பதக்கங்களை பெற்றிட முடியும். பொறியியல் துறையில் படித்து வரும் மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மிக முக்கியம். விளையாட்டில் ஈடுபடும்போது தான் தன்னம்பிக்கை அதிகம் கிடைக்கும்  என்றார்.

     கல்லூரி முதல்வர் கமால்பாட்சா வரவேற்றார். ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர்கள் செந்தில், எஸ்தர்ராஜகுமாரி ஆகியோர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai