Enable Javscript for better performance
1,007 பேருக்கு விலையில்லாப் பொருள்கள்- Dinamani

சுடச்சுட

    

     தஞ்சாவூர் மாவட்டம், குளிச்சப்பட்டு ஊராட்சியில் 491 பேருக்கும், திருநல்லூர் ஊராட்சியில் 516 பேருக்கும் தமிழக அரசின் விலையில்லாப் பொருள்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    குளிச்சப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு பொருள்களை வழங்கி, மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் பேசியது:

    ஏழைகளைக் காப்பதற்காகவும், பெண்களின் நலனுக்காகவும் தமிழக முதல்வர் சிறப்புத் திட்டங்களின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இதில், மாவட்டத்தில் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் பணி 85 சதம் நிறைவடைந்துள்ளது.

    மீதமுள்ளவர்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் பாஸ்கரன்.

    மாவட்ட ஊராட்சி தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பின்னர், திருவோணம் ஒன்றியத்துக்கு உள்பட்ட திருநல்லூர் ஊராட்சியில் 516 குடும்பங்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் ஆகியவை வழங்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai