Enable Javscript for better performance
அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
     தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக அம்பேத்கர் மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. சங்கங்கள் சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலர் துரை. மதிவாணன், அம்பேத்கர் சங்கப் பொருளாளர் க. சேகர் தலைமை வகித்தனர்.
     இந்த விழாவில் அம்பேத்கரின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
     மேலும், தஞ்சை நகரில் அம்பேத்கருக்கு அரசு சார்பில் நினைவு சிலை அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஜாதிய கொடுமைகளுக்கு எதிராகவும், அனைவரும் சம உரிமைப் பெறவும் தொடர்ந்து போராடுவது என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
     தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சி. சந்திரகுமார், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலர் குழ. பால்ராசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ம. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாஞ்சிக்கோட்டை சாலையில் மறியல் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
     தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சி கி. வரதராசன் தலைமையில் தஞ்சை வடக்கு வட்டாரத் தலைவர் சிவ. முரளிதரன், நகரச் செயலர் கோவி. மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     அதே இடத்தில் பாஜக தஞ்சை ஒன்றியக் கிளை சார்பில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றியத் தலைவர் தி. சந்திரன் தலைமை வகித்தார்.
     இதில், மாநில அமைப்புசாரா தலைவர் பாண்டித்துரை, இணை அமைப்பாளர் பால. செல்வம், மாவட்ட வர்த்தகப் பிரிவு தலைவர் கே.கே. கண்ணன், சேவைப் பிரிவுத் தலைவர் கணேஷ்பாபு உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
     நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழா, கொடியேற்று விழா, நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழாவுக்கு இயக்கத்தின் நகரச் செயலர் மு. செல்வகுமார் தலைமை வகித்தார்.
     மாநிலத் துணைத் தலைவர் ஆழி.கு. மகாலிங்கம், மாவட்டத் தலைவர் சிவ. முருகேசன், துணைச் செயலர் அ. லூர்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     ரயிலடியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நடைபெற்ற விழாவில் அம்பேத்கர் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி. திருநாவுக்கரசு தலைமையில் நகரச் செயலர் பார்த்திபன், ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதி தலைவர் ஜயபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai