Enable Javscript for better performance
அம்பேத்கர் 123வது பிறந்தநாள் - பல்வேறு அமைப்புகள் சார்பில் மரியாதை - Dinamani

சுடச்சுட

    

    அம்பேத்கர் 123வது பிறந்தநாள் - பல்வேறு அமைப்புகள் சார்பில் மரியாதை

    By    கும்பகோணம்  |   Published on : 15th April 2013 09:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலக வாயில் அருகே அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அம்பேத்கரின் 123வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாநில கலை இலக்கிய அணி செயலாளர் க.முத்துபாரதி தலைமை வகித்து மாலை அணிவித்தார். தஞ்சை மாவட்ட தலைவர் பரமசிவம், செயலாளர் தாவூது, தொழிலாளர் சங்க செயலாளர் கிருஷ்ணன், அமைப்பு செயலாளர் கலியபெருமாள், நகர அமைப்பு செயலாளர் செந்தில், தலைவர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
     தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில்
     பேரவைத் துணைத்தலைவர் வீ.அண்ணாதுரை தலைமையிலும், முன்னாள் மாவட்ட செயலாளர் சா.விவேகானந்தன், அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை மாநிலத்தலைவர் செ.அரசாங்கம், க.செ.முல்லைவளவன், புரட்சியாளன், மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண¢டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புகழஞ்சலி செலுத்தினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai