Enable Javscript for better performance
படித்துக்கொண்டே இருந்தால்தான் புதிய சிந்தனைகள் கருத்துகள் ஏற்படும்- துணை வேந்தர்- Dinamani

சுடச்சுட

    

    படித்துக்கொண்டே இருந்தால்தான் புதிய சிந்தனைகள் கருத்துகள் ஏற்படும்- துணை வேந்தர்

    By கும்பகோணம்  |   Published on : 15th April 2013 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பட்டம் பெற்றபிறகும் படித்துக்கொண்டே இருந்தால்தான் புதிய சிந்தனைகள், கருத்துகள் பிறந்து கொண்டே இருக்கும் என்றார் காரைக்கடு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்.
    கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் 10 வது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜாஸ்மீன் வரவேற்றார். செயலாளர் பிரேமா மரியகொரட்டி முன்னிலை வகித்தார்.
    விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் சுடலைமுத்து பேசியது- முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் கூறியதுபோல் மாணவிகள் கனவு காண வேண்டும். அந்த கனவு வாழ்வில் முன்னேற தூண்டுதலாக இருக்கவேண்டும். வெற்றி பெற கனவு காணவேண்டும். மாணவிகள் தங்களின் செயல்பாடுகளையும், திறமைகளையும் அதிகரித்து கொண்டே இருக்க வேண்டும். கல்வி என்பது பட்டம் பெறுவதோடு மட்டும் முடிந்துவிடவில்லை. தொடர்ந்து பயில வேண்டும்.அப்போது தான் புதிய புதிய சிந்தனைகள், தேடல்கள், கருத்துகள் பிறந்து கொண்டே இருக்கும்.மாணவிகள் தெளிவான நோக்கத்தை திட்டமிட்டு வகுத்து கொள்ள வேண்டும். எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு நாம் படிப்பில் அவசியம் கவனத்தை செலுத்தினால் அதுவே வெற்றிக்கான வழியாக அமையும்.படித்து முடித்த பின் இந்த சமுதாயத்திற்காக நாம் என்ன செய்தோம். வளர்ந்து நல்ல நிலைக்கு வந்தபிறகு படித்த கல்லூரிக்கு கைமாறாக என்ன செய்யபோகிறோம் என எண்ணிப்பார்க்க வேண்டும். ஏதோ ஒரு வகையில் கல்லூரிக்கு நன்றியை தெரிவிக்க வேண்டும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai