சுடச்சுட

  

  சட்ட மேதை அம்பேத்கர் இந்திய ஒற்றுமைக்கும் பாடுபட்டார் என்றார் எழுத்தாளர் அ. மார்க்ஸ்.

  By தஞ்சாவூர்  |   Published on : 16th April 2013 05:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சட்ட மேதை அம்பேத்கர் இந்திய ஒற்றுமைக்கும் பாடுபட்டார் என்றார் எழுத்தாளர் அ. மார்க்ஸ்.

  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் அறக்கட்டளைச் சிறப்புக் கருத்தரங்கத்தில் அவர் மேலும் பேசியது:

  அம்பேத்கர் தலித் விடுதலைப் போராளியாக இருந்தாலும் கூட இந்திய ஒற்றுமைக்காகவும் பாடுபட்டார். இந்தியாவை சிதைக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

  1935-க்குப் பிறகு அவர் சுதந்திர தொழிலாளர் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய அவர் உழைப்பாளிகள் வர்க்கத்துக்காகவும் போராடத் தொடங்கினார். நாடு சுதந்திரமடைந்த பிறகு அவர் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றார். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தார்.

  அம்பேத்கருக்கு இறுதி வரை மதத்தின் மீது நம்பிக்கை இருந்தது. மக்களுக்குப் பகுத்தறிவை ஏற்படுத்த சிறந்த கட்டமைப்பு வேண்டும் என்பதே அவர் மதத்தின் மீது நம்பிக்கை வைத்ததற்குக் காரணம். அந்த வகையில் அவர் பெüத்த மதத்தை தேர்வு செய்தார். மதத்தில் பக்தி இருக்கலாம் எனக் கூறிய அவர் அரசியலில் பக்தி கூடாது எனக் குறிப்பிட்டார். அரசியலில் பக்தி இருந்தால் அது சர்வாதிகாரத்துக்கு வழிவகுத்துவிடும் என்றார் அவர். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறினார். இந்த மூன்றும் இணைந்திருந்தால்தான் சிறந்த ஜனநாயகத்துக்கு முன்னுதாராணம். அதன் மூலம் அடுத்த கட்ட வளர்ச்சியைப் பெற முடியும் என்றார் மார்க்ஸ். நீலகிரி ஊராட்சித் தலைவர் கு. பரசுராமன்    உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai