Enable Javscript for better performance
தண்ணீர்ப் பந்தல் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணி ரயில் நிலையம் அருகே அதிமுக சார்பில் தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

    தொகுதிச் செயலர் மா. கோவிந்தராஜன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் உ. துரைமாணிக்கம் முன்னிலை வகித்தார்.

    ஒன்றியக் குழுத் தலைவர் சாந்திஅசோக்குமார் தண்ணீர்ப் பந்தலைத் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் எஸ்.எம். நீலகண்டன், இணைச் செயலர் ஆர்.பி. ராஜேந்திரன், அவைத் தலைவர் எம். சுந்தரராஜன், பேரூராட்சி உறுப்பினர் மு. சீனிவாசன், எஸ். பாண்டியராஜன், கே.பி. சேகர், மணிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai