Enable Javscript for better performance
திருக்குறளால் புதிய கருத்துகள் தோன்றும்- Dinamani

சுடச்சுட

    

    திருக்குறள் பயின்றால் பலப் புதுக் கருத்துகள் தோன்றும் என்றார் கவிஞர் இரெ. கங்கை மணிமாறன்.

    தமிழ்ப் புத்தாண்டையொட்டி, தஞ்சாவூரில் உலகத் திருக்குறள் பேரவை சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற சமய நல்லிணக்க நாள் விழாவில் அவர் மேலும் பேசியது:

    சமய நல்லிணக்கத்துக்கு ஏற்ற வகையில் சங்க காலத்திலேயே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என எழுதியவர் திருவள்ளுவர். சங்க காலத்தில் கள் உண்ணுவதையும், பரத்தையர் உறவையும் ஆமோதித்த நேரத்தில் இவை இரண்டையும் எதிர்த்து கடுமையாகக் கண்டித்த புரட்சியாளர் திருவள்ளுவர். திருக்குறளைப் பயில, பயில புதுப்புதுக் கருத்துகள் தோன்றும். வடக்கே இமயமலை போல, தெற்கில் கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை உள்ளது. சுனாமியால் கூட இந்தச் சிலையை அசைக்க முடியவில்லை என்றார் கங்கை மணிமாறன்.

    விழாவுக்கு பாரத் கல்விக் குழுமச் செயலர் புனிதா கணேசன் தலைமை வகித்தார். பரிசுத்தம் பொறியியல் கல்லூரி தலைவர் எஸ்.பி. அந்தோணிசாமி, சா. ஆசிப் அலி, பொறியாளர் நோ.த. பாலசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பேரவையின் செயலர் பழ. மாறவர்மன் வரவேற்றார். புலவர் மா. கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai