Enable Javscript for better performance
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ. 47 ஆயிரம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ. 47 ஆயிரம் திருட்டு

    By பாபநாசம்,  |   Published on : 16th April 2013 05:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே திங்கள்கிழமை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ. 47 ஆயிரம் திருடுபோனது.

    அய்யம்பேட்டை காவல் சரகம் மானாங்கோரை கிராமத்தில் தஞ்சாவூர் கும்பகோணம் பிரதான சாலையில் இந்த வங்கி உள்ளது. இந்த வங்கியின் செயலரான தஞ்சாவூரைச் சேர்ந்த ஆர். செல்வராஜ் திங்கள்கிழமை வங்கிக்கு வந்தபோது இது தெரியவந்தது.

    மர்ம நபர்கள் வங்கியின் முன்பக்கக் கதவை உடைத்து உள்ளே சென்று அருகிலுள்ள அங்காடி சுவரைத் துளையிட்டு அதன் வழியாக பெட்டக அறைக்குள் நுழைந்து பாதுகாப்பு பெட்டகத்தை உடைக்க முயன்றுள்ளனர்.

    முடியாமல் போகவே வங்கிப் பணப் பெட்டியில் இருந்த ரூ. 47 ஆயிரத்தைத் திருடிச் சென்றனர்.

    இதனால் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்த ரூ. 2 கோடி நகைகள் தப்பின.

    புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசன்,அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் பழனிசாமி,உதவி ஆய்வாளர் விஜயா, கைரேகை நிபுணர் சந்திரசூடன், தடய அறிவியல் நிபுணர் கலைகண்ணகி உள்ளிட்டோர் இங்கு ஆய்வு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

    சம்பவம் குறித்து அய்யம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai