Enable Javscript for better performance
பாபநாசத்தில் உழவர் பெருவிழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்தில் உழவர் பெருவிழா ஞாயிற்றுகிழமை தொடங்கியது.

    தமிழக அரசு சார்பில் 2-ம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் இந்த விழா மே 13 வரை பாபநாசம் ஒன்றியத்தில் நடத்தப்படுகிறது. இதில் பல்வேறு துறை வல்லுநர்கள் பங்கேற்று தொழில்நுட்பக் கருத்துகளை வழங்குகின்றனர்.

    கருத்துக் காட்சிகள் அடங்கிய உழவர் ரதம் கிராமங்கள்தோறும் சென்று விவசாயிகளைச் சந்தித்து வேளாண் தொடர்பாக விளக்கப்படுகிறது. மதியம் விவசாயிகளுக்கு அறுசுவை உணவும் வழங்கப்படுகிறது.

     பாபநாசம் ஒன்றியக் குழுத் தலைவர் கே. கோபிநாதன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.  வேளாண் உதவி இயக்குநர் (பொ) ஏ. ஆனந்தப்பிரியா,துணை வேளாண் அலுவலர் கொளஞ்சிநாதன்,வேளாண் பொறியியல் துறை உதவிப் பொறியாளர் ஆர். பஞ்சாபிகேசன், உதவி வேளாண் அலுவலர் கரிகாலன்,தொழில்நுட்ப வல்லுநர்கள் ஜெயப்பிரபா,முருகதாஸ் உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு வேளாண் சம்பந்தமாக விளக்கமளித்தனர்.

     பேரூராட்சித் தலைவர் எம். கருணாநிதி,நகரச் செயலர் வி. நாகைய்யன்,மாவட்டக் குழு உறுப்பினர் நா. மகேந்திரன்,பொதுக் குழு உறுப்பினர் எஸ். மோகன்,புலவர் தனபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai