Enable Javscript for better performance
பேனர் சேதத்தை கண்டித்து மறியல்- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் விடுதலைச் சிறுத்தை கட்சி பேனர் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து திங்கள்கிழமை மறியல் நடைபெற்றது.

    திருவிடைமருதூர் வடக்கு வீதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கர் பிறந்த தினத்தை ஒட்டி வைத்திருந்த பதாகையை யாரோ சேதப்படுத்தியிருந்தனர்.  இதனால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர் திங்கள்கிழமை சாலை மறியல் செய்தனர். அப்போது கடைத் தெருவில் டீக்கடை, மளிகைக் கடை அடித்து சேதப்படுத்தப்பட்டது.

    இதைக் கண்டித்து வர்த்தகர்கள் கடை அடைப்பு செய்து வர்த்தக சங்கத் தலைவர் பாலகுரு, சங்கக் காப்பாளர் சுந்தரஜெயபால் ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

    இதையடுத்து தஞ்சை ஆட்சியரின் உத்தரவின்பேரில் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து டிஜிட்டல் பதாகைகளையும் வருவாய்த் துறையினர், பேரூராட்சி துறையினர் உடனடியாக அகற்றினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai