Enable Javscript for better performance
மதுக்கடையை அகற்றக் கோரி ஏப். 25 முதல் தொடர் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    மதுக்கடையை அகற்றக் கோரி ஏப். 25 முதல் தொடர் உண்ணாவிரதம்

    By தஞ்சாவூர்,  |   Published on : 16th April 2013 04:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை அரசு மேல்நிலைப் பள்ளி அருகேயுள்ள டாஸ்மாக் கடையை இடம் மாற்றாவிட்டால் ஏப். 25 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை இப்பள்ளி மாணவர்கள் அளித்த மனு:

    சுவாமிமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1,320 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிக்குச் செல்லும் பாதையிலேயே டாஸ்மாக் மதுக் கடை உள்ளது.

    வேறொரு இடத்திலிருந்த இக்கடை இந்த இடத்துக்கு மாற்றியபோது மாணவிகளுக்குப் பாதுகாப்பு இருக்காது என்றும், அதனால் கடையை வேறு இடத்துக்கு மாற்றுமாறும் வலியுறுத்தப்பட்டது. விரைவில் மாற்றுவதாக அலுவலர்கள் உறுதி அளித்தாலும் இதுவரை மாற்றப்படவில்லை.

    இதனால் மது அருந்துவோர் இரவு 10 மணிக்கு பிறகு பள்ளி அருகிலேயே குடித்து விட்டு, அங்கேயே பாட்டிலை உடைத்துவிட்டுச் செல்கின்றனர். இதுதொடர்பாக போராட்டங்கள் நடத்தியும், சுவாமிமலை பேரூராட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றி, ஆட்சியரகத்துக்கு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, ஏப். 25 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai