Enable Javscript for better performance
விபத்தில் இறந்தவரின்  குடும்பத்துக்கு ரூ. 14.40 லட்சம் இழப்பீடு- Dinamani

சுடச்சுட

    

    விபத்தில் இறந்தவரின்  குடும்பத்துக்கு ரூ. 14.40 லட்சம் இழப்பீடு

    By தஞ்சாவூர்,  |   Published on : 16th April 2013 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ. 14.40 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

    புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகேயுள்ள கல்லாக்கோட்டையைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (30), கூலித் தொழிலாளி.

    2011 செப். 5-ம் தேதி கந்தர்வகோட்டை - பட்டுக்கோட்டை சாலையில் சைக்கிளில் சென்ற இவர் மீது அந்த வழியாக வந்த கார் மோதியது.

    இதில், பலத்த காயமடைந்த அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

    இதையடுத்து அவரது மனைவி ராதிகா தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி முகமது அலி தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ. 14.44 லட்சம் இழப்பீடு வழங்குமாறு ஐ.சி.ஐ.சி.ஐ. லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் திருச்சி கிளைக்கு உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai