Enable Javscript for better performance
வேட்புமனுவை வாங்க அலுவலர் இல்லை எனப் புகார்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நடத்தும் அதிகாரி திங்கள்கிழமை வராததால் வேட்புமனு செய்ய வந்தோர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    பாபநாசம் ஒன்றியம்,உம்பளப்பாடி ஊராட்சி,உம்பளப்பாடி மேலத்தெருவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம் இயங்கிவருகிறது.

    கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நடைபெறுவதையொட்டி சங்க உறுப்பினர்கள் தேர்தலில் நிற்கும் பொருட்டு வேட்பு மனு கொடுக்க வந்தனர்.

    ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரி வராததால் அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து திரும்பிச் சென்றனர்.

    இதுகுறித்து பால் ஊற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் சார்பில் கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai