Enable Javscript for better performance
அரசு பள்ளியில் முப்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணி அருகேயுள்ள செங்கமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா, கலை நிகழ்ச்சிகள் ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.

    விழாவிற்கு தலைமையாசிரியர் ஆ. சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் லட்சுமி பகவத்சிங், துணைத் தலைவர்  உமா செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட கல்வி அலுவலர் சி. நரேந்திரன் சிறப்புரையாற்றினார். விழாவில் ஒன்றியக் குழுத் தலைவர் சாந்தி அசோக்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் செ. கருணாநிதி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் வி. முத்துராமலிங்கம் மற்றும்  கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai