Enable Javscript for better performance
உலக வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    உலக வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும்

    By தஞ்சாவூர்  |   Published on : 17th April 2013 04:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலக வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் த. வெள்ளையன்.

    இதுகுறித்து தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை இரவு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:

    சென்னை தீவுத் திடலில் மே 5-ம் தேதி நடைபெறவுள்ள வணிகர் தின விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான வணிகர்கள் பங்கேற்கவுள்ளனர். இது 30-வது மாநில மாநாடு மட்டுமல்லாமல் உலக வர்த்தக ஒப்பந்த எதிர்ப்பு மாநாடாகவும் நடத்தப்படுகிறது. இதில் அகில இந்திய வணிகர் சங்கங்கள், புதுச்சேரி வணிகர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அழைத்துள்ளோம்.

    உலக வர்த்தக ஒப்பந்தத்தால் நம் நாட்டில் எந்த துறையும் முன்னேற்றம் அடையவில்லை. மத்திய அரசின் தவறான ஏற்றுமதி கொள்கையால் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து நமது நாடு வெளியேற வேண்டும். இந்தக் கோரிக்கையை மத்திய அரசுக்கு வணிகர்கள் மூலம் தெரிவிப்பதே மாநாட்டின் நோக்கம்.

    உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் பன்னாட்டு வணிகம் தழைக்கவும், பண முதலைகள் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் மோசடியான சட்டம். சில்லறை  வணிகர்களை அழிக்க ஆயத்தமாகி வரும் இந்தச் சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார் வெள்ளையன்.

    முன்னதாக, தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai