Enable Javscript for better performance
ஒரத்தநாட்டில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஒரத்தநாட்டில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலர் சசி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஒரத்தநாடு நகரில் ஸ்டேட் வங்கி முன்பு தேங்கி கிடக்கும் சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும். பட்டாணித் தெரு, தர்கா பகுதி மற்றும் குடியிருப்பு பகுதி சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும். சந்தைப்பேட்டை பகுதியில் விற்பனை செய்யப்படும் சுகாதாரமற்ற மீன், ஆடு, கோழி கறி ஆகியவற்றை உடனே சுகாதார ஆய்வாளர்கள் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட காலமாக முடங்கி கிடக்கும் கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையத்தை செயல்படுத்த வேண்டும். முத்தம்பாள்புரம் தண்ணீர் டேங்க் அருகில் நீண்ட காலமாக

    குடியிருப்போருக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டுற்ம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் சுரேஷ்குமார் தொடக்கிவைத்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க ஒன்றியத் தலைவர் கோவிந்தராஜ், விவசாய தொழிலாளாó சங்க ஒன்றியத் தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai