Enable Javscript for better performance
கும்பகோணம் நீதிமன்றம் எதிரில் தண்ணீர் பந்தல் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் நீதிமன்றம் எதிரில் தண்ணீர் பந்தல் திறப்பு

    By கும்பகோணம்,  |   Published on : 17th April 2013 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் அதிமுக தஞ்சை வடக்கு மாவட்ட வழக்குரைஞர் பிரிவு சார்பில் தண்ணீர் பந்தல் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலர் சோழபுரம் அறிவழகன் தலைமை வகித்தார். குடிநீர் பந்தலை கும்பகோணம் நகரச் செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான  ராம. ராமநாதன் திறந்துவைத்தார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் ரத்னா சேகர், நகர்மன்ற துணைத் தலைவர் ராஜா நடராஜன்.

     தொகுதி செயலர் தம்பி. தேவரத்தினம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலர் ஆர்.எஸ். செல்வராஜ், முன்னாள் நகர செயலர் ஏ. ராஜேந்திரன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கோவி. மகாலிங்கம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     தொடர்ந்து, தண்ணீர் பந்தலில் பொதுமக்களுக்கு நீர் மோர், தர்ப்பூசனி, பானகம் உள்ளிட்டவைகளை அதிமுக நிர்வாகிகள் வழங்கினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai