Enable Javscript for better performance
கும்பகோணம், - Dinamani

சுடச்சுட

    

    இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் நல சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஒரு நாள்  உண்ணாவிரதம் மேற்கொண்டனர். கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில், இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், சுமார் 450 இரு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் கடைகளை அடைத்து, உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்திற்கு சங்கத் தலைவர் எஸ். மோகன் தலைமை வகித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai