Enable Javscript for better performance
திருவிடைமருதூர் வட்டத்தில் இணையவழியில் நில ஆவணங்கள்- Dinamani

சுடச்சுட

    

    திருவிடைமருதூர் வட்டத்தில் இணையவழியில் நில ஆவணங்கள்

    By தஞ்சாவூர்,  |   Published on : 17th April 2013 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் வட்டத்தில் முன்னோடித் திட்டமாக இணையவழியில் நில ஆவணங்களைப் பராமரித்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் மேலும் தெரிவித்திருப்பது: திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள கணினியில் பராமரிக்கப்படும் நில ஆவணத் தகவல் தொகுப்பை நடுவண் மூலக் கணினிக்குப் பதிவேற்றம் செய்யும் முன்பே இப்போதைய நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

          எனவே, இந்த வட்டத்தைச் சேர்ந்த நில உடைமைதாரர்கள் தங்களுடைய நில ஆவணங்களில் மாற்றம் செய்ய தமது விண்ணப்பங்களை நில உரிமைப் பத்திரங்களின் நகல்களுடன் மே 10-ம் தேதி அல்லது அதற்கு முன்பு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அல்லது திருவிடைமருதூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai