Enable Javscript for better performance
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்

    By தஞ்சாவூர்,  |   Published on : 17th April 2013 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் உள்ள அருள்மிகு ஐயாறப்பர் கோவிலில் சித்திரைப் பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஏப். 28-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவின் தொடக்கமாக செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் கொடியேற்றப்பட்டது. இதில், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை முத்துகுமாரசுவாமித் தம்பிரான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழா நாள்களில் புதன்கிழமை தொடங்கி ஏப். 23-ம் தேதி வரை காலையில் பல்லக்கு புறப்பாடு நடைபெறவுள்ளது. இரவில் புதன்கிழமை ஆதிசேஷ வாகனத்திலும், வியாழக்கிழமை பூத வாகனத்திலும், ஏப். 19-ம் தேதி கைலாச வாகனம், காமதேனு வாகனத்திலும், 21-ம் தேதி யானை வாகனம், அன்ன வாகனத்திலும், 23, 26-ம் தேதிகளில் குதிரை வாகனத்திலும் வீதியுலா நடைபெறவுள்ளது.

    ஏப். 20-ம் தேதி மாலை 6 மணிக்கு தன்னைத்தானே பூஜித்தல், ஆறூர் சுவாமிகள் வருகை, இறைவன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சன்னதி முன் சைவர்களுக்கு மாகேசுவர பூஜை செய்தல், பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனத்தில் எழுந்தருளல், சதுர்முகச் சப்பர வீதியுலா காட்சி ஆகியவை நடைபெறவுள்ளன. 22-ம் தேதி இரவு மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோ ரதத்தில் வீதியுலா, 24-ம் தேதி காலை 9 மணியளவில் தேரோட்டம், 25-ம் தேதி காலை ஸ்ரீ நடராஜர் வீதியுலா, மஞ்சள் நீராடி தீர்த்தம் கொடுத்தருளல், 26-ம் தேதி காலை ஸ்ரீ பிச்சாடன மூர்த்தி பவனி ஆகியவை நடைபெறவுள்ளன. ஏப். 27-ம் தேதி சப்தஸ்தானம் என்கிற ஏழூர் பல்லக்கு வலம் வருதல், 28-ம் தேதி பொம்மை பூ போடும் காட்சி, ஆறூர் பல்லக்குகளும் ஐயாறப்பர் கோவிலில் வரும் காட்சி ஆகியவை நடைபெறவுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai