Enable Javscript for better performance
நீலகண்ட பிள்ளையார் கோவிலில் கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணியில் உள்ள நீலகண்ட பிள்ளையார் கோவிலில் சித்ரா பெüர்ணமி திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    12 நாள் நடைபெறும் விழாவில் இரண்டாம் நாள் கேடக வாகனத்திலும், மூன்றாம் நாள் காமதேனு, நான்காம் நாள் பூத வாகனத்திலும், ஐந்தாம் நாள் அன்ன வாகனத்திலும், ஆறாம் நாள் மயில் வாகனத்திலும், ஏழாம் நான் ரிஷப வாகனத்திலும், எட்டாம் நாள் குதிரை வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடைபெறும். ஏப். 24-ம் தேதி ஒன்பதாம் நாள் காவடி எடுத்தல், தேரோட்டம் நடைபெறும்.

    பத்தாம் நாள் தீர்த்தவாரியும், பதினோராம் நாள் காலை திருக்கல்யாணமும் இரவு தெப்ப உத்சவமும் ஏப். 27-ல் விடையாற்றி உத்சவமும் நடைபெறவுள்ளது.

    திருவிழா நாள்களில் சமய சொற்பொழிவுகளும், இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி, திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் முடப்புளிக்காடு கிராம மக்கள் செய்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai