Enable Javscript for better performance
பொறியியல் பட்டதாரிகளுக்காக ஆலோசனைக் குழு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உள்ள பெரியார் தொழில்நுட்ப வணிகக் காப்பகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பெரியார் தொழில்நுட்ப வணிகக் காப்பகத் தலைமைச் செயல் அலுவலர் அ.ப. அருணா தெரிவித்திருப்பது:

    இன்றைய காலகட்டத்தில் வளாக நேர்முகத் தேர்வில் வேலைவாய்ப்பு பெறுவோர், தனி முயற்சியில் வேலை பெறுவோர் போக ஏராளமான மாணவர்கள் வேலை பெற சிரமப்படுகின்றனர். வேலையில் சேருபவர்களில் பெரும்பாலானோர் பணியில் விருப்பம் இன்றி செயல்படுகின்றனர்.

    இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இளைஞர்கள் புதுப்புது கருத்துகளைச் சிந்திப்பதும், அவற்றுக்கான மாதிரி வடிவங்கள் செய்வதும் பெருகி வரும் சூழ்நிலையில் அவற்றை ஒழுங்குபடுத்தி வியாபார ரீதியில் வெற்றி பெற பெரு முயற்சி தேவைப்படுகிறது. அதற்கான ஆலோசனைகளும், உதவிகளும் எங்கு கிடைக்கும் எனத் தெரியாமல் பல மாணவர்கள் தடுமாறுகின்றனர்.

    இந்தக் குறையைப் போக்கும் வகையில் பெரியார் தொழில்நுட்ப வணிகக் காப்பகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. பொறியியல் துறையில் சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோருக்கான அனைத்து ஆலோசனைகளும் அளிக்கப்படும்.

    ஆர்வம் உள்ளவர்கள் 04362 - 264520 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது ண்ய்ச்ர்ல்ங்ழ்ண்ஹ்ஹழ்ற்க்ஷண்.ர்ழ்ஞ் என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். கட்டணம் இன்றி நடத்தப்படும் இந்த ஆலோசனையைப் பொறியியல் படித்து முடித்த இளைஞர்களும், படித்து கொண்டிருக்கும் மாணவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம் என அருணா தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai