Enable Javscript for better performance
மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் அருகே செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தார்.

    தஞ்சாவூர் அருகேயுள்ள மேலதிருப்பூந்துருத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (55). விவசாயி. இவர் செவ்வாய்க்கிழமை காலை தனது வெற்றிலை கொடிக்கால் வயலுக்குச் சென்று கொண்டிருந்தார். இதற்காக மற்றொரு வயல் வழியே சென்று கொண்டிருந்த அவர், அங்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த கம்பியை மின் கம்பி என்பது தெரியாமல் தொட்டுவிட்டார்.

    இதனால் கலியமூர்த்தி மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நடுக்காவிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai