Enable Javscript for better performance
ராதா கல்யாண மகோத்சவம்- Dinamani

சுடச்சுட

    

    பாபநாசம் அருகேயுள்ள உத்தமதானபுரம் அக்ரஹாரத்தில் ராதா  கல்யாண மகோத்சவம் அண்மையில் நடைபெற்றது.

    விழாவையொட்டி உஞ்சவிருத்தி, அஷ்டபதி, பஜனை பாடல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    லட்சுமிநாராயண பெருமாள் கோவிலிலிருந்து மணமகன் அழைப்பு நடந்தது.

    கடையநல்லூர் ராஜகோபால பாகவதர் தலைமையில் எட்டு பாகவதர்கள் கலந்து கொண்டு அஷ்டபதி பஜனை, பிருந்தாவன கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினர்.

    தொடர்ந்து, ராதா கல்யாண வைபவம், ஊஞ்சலாட்டம் நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை கோபால ஐயர் குடும்பத்தினர், ஹரிஹரசுதன், மணிகண்டன், அஞ்சலக அதிகாரி ராஜகோபாலன், தலைமை ஆசிரியர் சுந்தரராமன் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai