Enable Javscript for better performance
ரியல் எஸ்டேட் உரிமையாளர் கொலை: உறவினர்கள் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    ரியல் எஸ்டேட் உரிமையாளர் கொலை: உறவினர்கள் மறியல்

    By தஞ்சாவூர்,  |   Published on : 17th April 2013 04:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் அருகே திங்கள்கிழமை இரவு ரியல் எஸ்டேட் உரிமையாளர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர் அருகே ரெட்டிபாளையம் காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கே. ராமமூர்த்தி (40). ரியல் எஸ்டேட் உரிமையாளரான இவர் திங்கள்கிழமை இரவு பிள்ளையார்பட்டி அருகே மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த கே. ராமகிருஷ்ணன், டி. ரமேஷ், பி. செந்தில், ஆர். மணிகண்டன், ஆர். பாலா, எஸ். மனோகரன் ஆகியோர் மீது தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள 6 பேரையும் தேடி வருகின்றனர். இந்நிலையில், ராமமூர்த்தியைக் கொலை செய்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் செவ்வாய்க்கிழமை காலை அரசு மருத்துவக் கல்லூரி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மருத்துவக் கல்லூரி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் கூறியததையடுத்து, உறவினர்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai