Enable Javscript for better performance
அரசு மருத்துவமனையில் இணை இயக்குநர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநர் மீனாட்சி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
     தஞ்சாவூர் மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநராக புதிதாகப் பதவி ஏற்றுக்கொண்ட மருத்துவர் மீனாட்சி, ஒரத்தநாடு அரசு மருத்துவமனை ஆய்வுக்கு புதன்கிழமை வந்தார். அப்போது, அவரை தலைமை மருத்துவர் வெற்றிவேந்தன், சிவக்குமார், குணசீலன், ஷர்மிளாபேகம் ஆகியோர் வரவேற்றனர்.
     மருத்துவமனையில் அனைத்துப் பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொண்ட இணை இயக்குநர் மருத்துவமனையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் நடத்துவதற்கு ஆலோசனை வழங்கினார்.
     மேலும், மருத்துவமனையில் பொதுப்பணித் துறையினரால் மேற்கொள்ளப்படும் சிவில் பணிகளையும், மின்சாரப் பணிகளையும் விரைந்து முடிக்குமாறும் உத்தரவிட்டார்.
     தலைமை மருத்துவர் வெற்றிவேந்தன் மருத்துவமனைக்கு பாராமரிப்புத் தொகை கூடுதலாக ஒதுக்க ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஆவன செய்து தருவதாக இணை இயக்குநர் உறுதி அளித்தார். 24 மணி நேரமும் மருத்துவர்கள் தங்கி சிகிச்சை அளிப்பதற்கு கூடுதல் மருத்துவர்களை பணியில் அமர்த்த, மாவட்ட ஆட்சியரிடத்திலும், திட்ட இயக்குநரிடத்திலும் பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான உறுதியளித்தார்.
     மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக பழுதடைந்திருந்த ஜெனரேட்டர் இயந்திரம் பழுது நீக்கப்பட்டு இயங்குவதையும், உள்நோயாளிகள் பிரிவில் தங்கி சிகிச்கை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
     குடிநீர்த் தொட்டிகளை தினசரி சுத்தப்படுத்திடவும், சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் கணிவுடன் நடந்துகொள்ள வேண்டுமெனவும் மீனாட்சி தெரிவித்தார்.
     ஆய்வின் போது, தமிழ்நாடு சுகாதார முறைமைகள் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எட்வின், கண்காணிப்பாளர் இளங்கோ மற்றும் ஒரத்தநாடு மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai