Enable Javscript for better performance
\\\"இயற்கைக்கு எதிராகச் செயல்பட்டால் பாதிப்பு\\\'- Dinamani

சுடச்சுட

    

    "இயற்கைக்கு எதிராகச் செயல்பட்டால் பாதிப்பு'

    By  தஞ்சாவூர்  |   Published on : 18th April 2013 11:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இயற்கைக்கு எதிராகச் செயல்பட்டால் பாதிப்பு ஏற்படும் என்றார் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார்.
     தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற கல்லூரி நாள் விழாவில் அவர் மேலும் பேசியது:
     பஞ்சபூதங்கள் சேர்ந்ததுதான் பூமிக்கோளம். அந்த பஞ்சபூதங்கள் நம் உடலில் உள்ளன. அவை உடலில் உள்ள உறுப்புகள் வழியாகச் செயல்படுகின்றன.
     இயற்கைக்கு எதிராகச் செயல்படும்போது நம் உறுப்புகள் பழுதாகின்றன. வாதம், பித்தம், கபம் இவற்றில் எது கூடினாலும் நோய் வரும். இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை. உடல் ஒருபோதும் தனது கடமையைச் செய்யத் தவறுவதில்லை. நமக்கு எது தொந்தரவு செய்கிறதோ, அதை சாப்பிடக் கூடாது. பசி வராமல் சாப்பிடக் கூடாது. தாகம் இல்லாமல் தண்ணீர் குடிக்கக் கூடாது. தூக்கம் வரும்போது தூங்க வேண்டும். சோர்வு வரும்போது ஓய்வு எடுக்க வேண்டும். இயற்கையோடு வாழப் பழக வேண்டும். அளவு கடந்து சாப்பிடும்போது நோய் வரும்.
     இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். உணவைத் தரும் உழவன் தற்கொலை செய்து கொண்டால், அதற்கு உலகில் உள்ள அனைவருக்கும் பொறுப்பு உண்டு.
     இயற்கையான உரங்களை விட்டு விலகி அமெரிக்காவிலிருந்து ரசாயன உரங்கள், தொழில்நுட்பங்கள், விதைகள் ஆகியவற்றை வாங்குகிறோம். இவற்றை வாங்கும்போது விஷத்தை சேர்த்தும் வாங்குகிறோம் என்பது தெரிவதில்லை. இதனால், விவசாயத்தில் பேரிழப்பு ஏற்பட்டு, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறான்.
     விவசாயப் பாடத்தை வேளாண் பல்கலைக்கழகத்தில் படிக்கக் கூடாது நிலத்தில்தான் படிக்க வேண்டும். நம் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களையும் வாழும் கிராமங்களாக மாற்ற வேண்டும் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai