Enable Javscript for better performance
உக்கரை ஊராட்சியில் சமுதாயக் கூடத்துக்கு அடிக்கல்- Dinamani

சுடச்சுட

    

    உக்கரை ஊராட்சியில் சமுதாயக் கூடத்துக்கு அடிக்கல்

    By  கும்பகோணம்  |   Published on : 18th April 2013 11:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம், உக்கரை ஊராட்சியில் ரூ. 36 லட்சத்தில் கட்டப்பட உள்ள சமுதாயக் கூடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
     விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் மணிசங்கர் அய்யர் பங்கேற்று, அடிக்கல் நாட்டினார்.
     இந்நிகழ்ச்சிக்கு பாரத ஸ்டேட் வங்கி இயக்குநர் டி.ஆர். லோகநாதன் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் அமிர்தவள்ளி வரவேற்றார். பாரத் பெட்ரோலிய மண்டல மேலாளர் தங்கவேலு, பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் அபுகலாம், பஜார் கிளை மேலாளர் சேதுமுருகதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     முன்னதாக, மானம்பாடி, அணைக்குடி, புத்தூர், திருவள்ளியங்குடி, நரிக்குடி ஊராட்சிகளில் பொதுமக்களிடம் மணிசங்கர் அய்யர் கோரிக்கை மனுக்களை பெற்றார். வீராக்கன் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி, திருப்பனந்தாள் பேரூராட்சி நார வாய்க்காலில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர், திருமங்கலகுடியில் கட்டப்பட்டுள்ள மினி பவர் வாட்டர் டேங்க், பாலாகுடி வாய்க்காலில் பாலம் ஆகியவற்றை மணிசங்கர் திறந்து வைத்தார்.
     இதையடுத்து, நரசிங்கன்பேட்டை ஊராட்சியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் எஸ்.எஸ்.எஸ். திட்டத்தில் ரூ. 36 லட்சத்தில் கட்டப்பட உள்ள சமுதாயக் கூடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
     காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சபில் ரகுமான், மாவட்டச் செயலர் சாமிநாதன், நிர்வாகிகள் புஷ்பராஜ், சிவசங்கர், நாராயணசாமி, ராஜன், பாலதண்டாயுதம், கண்ணதாசன், நரசிங்கன்பேட்டை ஊராட்சித் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai