Enable Javscript for better performance
கிலோ ரூ. 20 அரிசி திட்டத்துக்கு 625 டன் ஒதுக்கீடு- Dinamani

சுடச்சுட

    

    கிலோ ரூ. 20 அரிசி திட்டத்துக்கு 625 டன் ஒதுக்கீடு

    By  தஞ்சாவூர்  |   Published on : 18th April 2013 11:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கிலோ 20 ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டத்துக்கு 625 டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன்.
     தஞ்சாவூர் காவேரி சிறப்பங்காடியில் புதன்கிழமை தமிழக முதல்வரின் கிலோ 20 ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டத்தைத் தொடக்கிவைத்த அவர், பின்னர் தெரிவித்தது:
     தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு அரிசி வாங்குவதையும், சிரமப்படுவதையும் கருத்தில் கொண்டு அமுதம் அங்காடிகள், கூட்டுறவு நிறுவனங்கள், சிறப்பங்காடிகள் ஆகியவற்றில் தமிழக முதல்வர் கிலோ 20 ரூபாய்க்கு அரிசி விநியோகிக்கத் திட்டமிட்டார். இதற்காக மாநிலம் முழுவதற்கும் 1 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தத் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
     இந்தத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 625 மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் காவேரி சிறப்பங்காடியிலும், பட்டுக்கோட்டையில் தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையத்திலும், கும்பகோணத்தில் சந்திரசேகரபுரம் கூட்டுறவு பண்டகசாலையிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கிலோ 20 ரூபாய்க்கு என்ற அடிப்படையில் 5 கிலோ, 10 கிலோ, 25 கிலோ கொண்ட பைகளில் அடைக்கப்பட்டு பொது மக்களின் வசதிக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது என்றார் பாஸ்கரன்.
     மாவட்ட ஊராட்சித் தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன், கல்விக் குழுத் தலைவர் ஆர். காந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ். சுப்பிரமணியன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் (பொறுப்பு) என். செல்லப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai