Enable Javscript for better performance
கும்பகோணம்: இடையூறாக இருந்த விளம்பரத் தட்டிகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம்: இடையூறாக இருந்த விளம்பரத் தட்டிகள் அகற்றம்

    By  கும்பகோணம்  |   Published on : 18th April 2013 11:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விளம்பரத் தட்டிகளை போலீஸார் புதன்கிழமை அகற்றினர்.
     இந்நகரில் பல்வேறு அரசியல் கட்சியினர் பிளக்ஸ் தட்டிகள் வைத்திருந்தனர். இது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
     கும்பகோணம் மீன் மார்க்கெட், 4 சாலை, பாலக்கரை, மடத்துத்தெரு, காந்தி பூங்கா, சாரங்கபாணிகோவில் பகுதி, மகாமக குளம், ரயிலடி, மொட்டை கோபுரம், பேருந்து நிலையம் மற்றும் பல இடங்களில் விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில் கும்பகோணம் டிஎஸ்பி சிலம்பரசன் உத்தரவின்படி, விளம்பரத் தட்டிகள் அனைத்தும் போலீஸாரால் அகற்றப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai