Enable Javscript for better performance
பெரியார் மணியம்மை பல்கலை.யில் ரத்ததான முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பெரியார் மணியம்மை பல்கலை.யில் ரத்ததான முகாம்

    By  தஞ்சாவூர்  |   Published on : 18th April 2013 11:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் ரத்ததான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
     பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, 1,000 யூனிட் ரத்த தானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக புதன்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாமில் 150 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.
     பல்கலைக்கழகத் துணைவேந்தர் நல். ராமச்சந்திரன் தலைமையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியின் ரத்த வங்கி மருத்துவர் ராதிகா மைக்கேல் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமை மருத்துவர் ஏ. மைக்கேல் தொடக்கிவைத்தார்.
     நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் எஸ். புவனேஸ்வரி, இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் தையல்நாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai