Enable Javscript for better performance
\\\"வேதாத்திரியின் வாழ்வியல் சிந்தனை இக்காலத்துக்கு ஏற்றது\\\'- Dinamani

சுடச்சுட

    

    "வேதாத்திரியின் வாழ்வியல் சிந்தனை இக்காலத்துக்கு ஏற்றது'

    By  தஞ்சாவூர்,  |   Published on : 18th April 2013 11:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேதாத்திரி மகரிஷியின் வாழ்வியல் சிந்தனைகள் இக்காலத்துக்கு ஏற்றவை என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை.
     இந்தப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற வேதாத்திரி மகரிஷி நினைவு அறக்கட்டளை கருத்தரங்கத்தில் அவர் மேலும் பேசியது:
     உடல் நலமும், மன வளமும் ஒரே சமன்பாட்டில் இருந்தால் மட்டுமே உடல் நலம் நன்றாக இருக்கும். மாறுபாடு இல்லாத உணவுகளை ஒதுக்கிவிட்டு உண்டால் உயிர்களுக்கு உடல் நோய் இல்லை என்றார் வள்ளுவர். வேதாத்திரி மகரிஷியின் வாழ்வியல் சிந்தனைகள் இந்தக் காலகட்டத்துக்கும் தேவையானதாக இருக்கிறது என்றார் திருமலை.
     மொழிப்புலத் தலைவர் வ. குருநாதன், தஞ்சாவூர் மனவளக்கலை மன்றத் தலைவர் கு. சரவணன், பேராசிரியர் சுந்தரி தியாகராஜன் உள்ளிட்டோர் பேசினர்.முன்னதாக, மெய்யியல் துறைத் தலைவர் ஜெ. அரங்கசாமி வரவேற்றார். திட்ட உதவியாளர் கோ. லெனின் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai