Enable Javscript for better performance
அரசுத் திட்டங்கள் குறித்து உள்ளுர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரசுத் திட்டங்கள் குறித்து உள்ளுர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு

    By தஞ்சாவூர்  |   Published on : 19th April 2013 05:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசுத் திட்டங்கள் குறித்து உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

    இதுதொடர்பாக ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் பேசியது:

    தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல நலத் திட்டங்கள் மூலம் பயன் அடைந்தோர் பற்றி அரசு கேபிள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட வேண்டும். அரசுத் திட்டங்களைப் பொதுமக்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும். அரசின் சாதனைகள் மற்றும் அரசு விழாக்களில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை உள்ளுர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்வதற்காகப் படப்பிடிப்பு செய்ய வேண்டும். இந்தப் படத்தைத் தொகுக்கவும், தொகுத்த பின்னர் வர்ணணை பதிவு செய்யவும், அனுபவமிக்க வர்ணணையாளரை பணி நியமனம் செய்ய வேண்டும்.

    அரசு விழாக்களில் எடுக்கப்பட்ட விடியோ படத்தை தொகுக்கும் பணியையும், படத்தின் சாராம்சம்தை கருத்தில் கொண்டு ஒளிபரப்பு அனுமதியும் வழங்க வேண்டும். அனுமதி வழங்கிய பிறகு அரசு கேபிள் டிவிகளில் சரியாக ஒளிபரப்பப்படுகிறதா என்பதை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலரும், அரசு கேபிள் டிவி துணை மேலாளரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.

    இந்தக் குறும்படங்களைப் பொது மக்களுக்குப் பயனுள்ள வகையிலும், அரசின் திட்டங்கள் குறித்து எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் அமைய வேண்டும் என்றார் பாஸ்கரன்.

    ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் ராஜகோபால், அரசு கேபிள் டிவி ஆய்வாளர் லூர்துராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai