உலக சுகாதார நாள் விழிப்புணர்வு முகாம்
By தஞ்சாவூர், | Published on : 19th April 2013 05:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தஞ்சாவூர் அருகேயுள்ள அம்மன்பேட்டையில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் திருவையாறு கிளை சார்பில் உலக சுகாதார நாள் விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
திருவையாறு வட்டார செஞ்சிலுவை சங்கத் தலைவரும், தென்னை ஆராய்ச்சியாளருமான வா.செ. செல்வம் தலைமை வகித்தார்.
பிரிஸ்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஷீபா கிறிஸ்டினா சிறப்புரையாற்றினார். பல்களைப் பாதுகாக்க 100 பேருக்கு பேஸ்ட்களை ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் கோ. அன்பரசன் வழங்கினார்.
செஞ்சிலுவை சங்கத் துணைத் தலைவர் ஜெய்சிபால், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் வை. கலியபெருமாள், டாக்டர் வா.செ. மனோஜி, திருவையாறு தன்னம்பிக்கை பயிற்சி கல்லூரி முதல்வர் கலை. கோபிநாத், திருவையாறு திருவள்ளுவர் பேரவைத் தலைவர் குரு. சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.