Enable Javscript for better performance
கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

    By பாபநாசம்  |   Published on : 19th April 2013 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கூட்டுறவு சங்கத் தேர்தலை  ஜனநாயக முறைப்படி நடத்தக் கோரி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு வங்கி உறுப்பினர்கள், முன்னோடி விவசாயிகள் சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பாபநாசம் அருகேயுள்ள சோத்தமங்கலம் கிராமத்தில், சோத்தமங்கலம், மணலூர் மதகரம், மணக்குண்டு, பனந்திடல் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.

    கூட்டுறவு சங்கத் தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த கோரி இந்த பகுதியைச்  சேர்ந்த வங்கி உறுப்பினர்கள் ஜெயக்குமார், ரவிச்சந்திரன், அர்ச்சுனன் உள்ளிட்ட  நூற்றுக்கும் மேற்பட்டோர் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai