Enable Javscript for better performance
சாரங்கபாணி கோவில் சித்திரை தேரோட்ட விழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சாரங்கபாணி கோவில் சித்திரை தேரோட்ட விழா தொடக்கம்

    By கும்பகோணம்  |   Published on : 19th April 2013 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலின் சித்திரை  பெரியதேரின் தேரோட்ட விழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார்.

    இக்கோவிலின் சித்திரை தேரோட்டம் தமிழகத்தில் உலாவரும் மூன்று முக்கிய தேர்களில் ஒன்றாகவும், திருவாரூர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கும் இணையாக புகழ்பெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் சாரங்கபாணி கோவிலில் சித்திரை திருவிழாவின்போது பெரிய தேரும், தை முதல்நாளான பொங்கல் திருநாளில் சிறிய தேரின் தேரோட்டமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சித்திரை தேரோட்ட பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் பெருமாள், உபயநாச்சியார்களுடன் வெள்ளியிலான இந்திர, சூரியபிரபை, சேஷ, கருட, ஹனுமந்த, மங்களகிரி, பின்னைமர, குதிரை வாகனங்களில் வீதிவுலா  புறப்பாடு  நடைபெறும். ஏப். 20 -ம் தேதி இரவு ஓலைச்சப்பரமும், 24 -ம் தேதி காலை வெண்ணைத்தாழி சேவையும் நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்ட பெருவிழா வரும் 25 -ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் தேரோட்டம் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai