Enable Javscript for better performance
சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஐஸ் வியாபாரி கைது- Dinamani

சுடச்சுட

    

    பாபநாசம் அருகே 4 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஐஸ் வியாபாரியை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    அரியலூர் மாவட்டம், காமரசவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை (38). ஐஸ் வியாபாரி.

    இவர் பாபநாசம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வசித்து வந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில், தங்கதுரை தனது பக்கத்து வீட்டில் உள்ள 4 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

     இதையறிந்த அக்கம்பக்கத்தினர் தங்கதுரையை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

    இதில் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி தஞ்சாவூர் ராஜா மிராசுதாரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி வழக்குப் பதிவு செய்து, தங்கதுரையை கைது செய்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai