Enable Javscript for better performance
ஜெகந்நாதப் பெருமாள் கோவிலில் சுக்லபட்ச மகா அஷ்டமி ஹோமம் - Dinamani

சுடச்சுட

    

    ஜெகந்நாதப் பெருமாள் கோவிலில் சுக்லபட்ச மகா அஷ்டமி ஹோமம்

    By கும்பகோணம்,  |   Published on : 19th April 2013 05:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் அருகே நாதன்கோவில் கிராமத்தில் உள்ள  ஜெகந்நாதப் பெருமாள் திருக்கோவிலில் சுக்லபட்ச மகா அஷ்டமி ஹோமம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    மகாலட்சுமி பிரார்த்தனை செய்து எட்டு அஷ்டமி விரதம் இருந்து, எட்டாவது அஷ்டமியில் திருமாலின் திருமார்பில் இணைந்த தலமாக இத்தலம் போற்றப்படுகிறது. இக்கோவிலில் ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியிலும் சுக்ல பட்ச அஷ்டமி ஹோமம் நடத்தப்படுகிறது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தால், மாங்கல்ய தடை, குழந்தை பேரின்மை, குடும்பப் பிரச்னைகள்,  நாள்பட்ட நோய்கள் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம்.

    சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் வளர்பிறை அஷ்டமி என்பதால்  செண்பகவல்லித் தாயாருக்கு வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு தொடங்கி பகல் 1 மணி வரை சுக்லபட்ச மகா அஷ்டமி ஹோமம் நடைபெற்றது. சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை அஷ்டமியில் தாயாருக்கும், மூலவர் மற்றும் உத்சவ பெருமாளுக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.ஏற்பாடுகளை ஜெகந்நாதப் பெருமாள் கைங்கார்ய சபா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai