Enable Javscript for better performance
பாமக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவிடைமருதூரில் காவல்துறையைக் கண்டித்து, பாமக சார்பில் வியாழக்கிழமை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் அதிகாரிகளின் தலையீட்டால் ஒத்தி வைக்கப்பட்டது.

    திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய பாமக  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஏப்.18-ம் தேதி காலை 10 மணியளவில்  திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி, வியாழக்கிழமை மாவட்ட பாமக செயலர் ம.க. ஸ்டாலின் தலைமையில், கட்சியினர் கூடினர்.

    அப்போது, ஆர்ப்பாட்டம் தொடங்கும் நேரத்தில் திருவிடைமருதூர் காவல் ஆய்வாளர் செல்வராஜ், உதவி ஆய்வாளர் நாகலட்சுமி மற்றும் போலீஸார் அங்கு வந்து,  குறிப்பிட்ட காவல்துறை அதிகாரி மீது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரைத்திருப்பதாலும்,  ஆர்ப்பாட்டத்தால் சட்டம் - ஒழுங்கு சீர்குலையும் என்பதால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து, ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக மாவட்டச் செயலர்  ம.க. ஸ்டாலின் தெரிவித்ததையடுத்து, பாமகவினர் கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai