பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
By தஞ்சாவூர் | Published on : 19th April 2013 05:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தஞ்சாவூரில் புதன்கிழமை பிற்பகல் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இரு மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் கரந்தை கள்ளுக்கரைத் தெருவைச் சேர்ந்தவர் ஜயபாலின் மனைவி பாப்பாத்தி (55). இவர் புதன்கிழமை பிற்பகல் சுண்ணாம்புக்காரத் தெரு வழியாகச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், அவரது கழுத்திலிருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.