Enable Javscript for better performance
பெரியார் மணியம்மை பல்கலை.யில் தீ தடுப்பு தின நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    பெரியார் மணியம்மை பல்கலை.யில் தீ தடுப்பு தின நிகழ்ச்சி

    By தஞ்சாவூர்  |   Published on : 19th April 2013 05:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் வேதிப் பொறியியல் துறை சார்பில் தீ தடுப்பு தின நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

    பல்கலைக்கழகப் பதிவாளர் மு. அய்யாவு தலைமை வகித்தார். உதவிக் கோட்டத் தீயணைப்பு அலுவலர் கலியமூர்த்தி, தொழிற்சாலை ஆய்வாளர் ஆர். சித்தார்த்தன், தீ பாதுகாப்பு கருவி நிறுவன பயிற்றுநர் எம். அருண் பிரகாசம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மேலும், தீ தடுப்பு குறித்த செயல்விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

    முன்னதாக, வேதிப் பொறியியல் துறைத் தலைவர் மா. சந்தானமுத்து வரவேற்றார். உதவி பேராசிரியர் செ. மாரிமுத்து நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai